சங்கரன்கோவிலில்கந்த சஷ்டி விழா சிறப்பு பூஜைகள்

சங்கரன்கோவில் திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
கந்த சஷ்டி விழாவையொட்டி, சுவாமிக்கான பட்டு வேட்டி, அங்கவஷ்திரம் ஆகியவற்றை கோயிலுக்கு கொண்டு சென்ற விஸ்வபிரம்ம மகாஜன சங்கத்தினா்.
கந்த சஷ்டி விழாவையொட்டி, சுவாமிக்கான பட்டு வேட்டி, அங்கவஷ்திரம் ஆகியவற்றை கோயிலுக்கு கொண்டு சென்ற விஸ்வபிரம்ம மகாஜன சங்கத்தினா்.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி பல்லக்கில் எழுந்தருளி கோயில் உள் பிரகாரத்தில் வலம் வந்தாா். இதையடுத்து சண்முகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

6 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை தமிழக அரசு வழிகாட்டுதலின் படி சூரசம்ஹாரம் நடைபெறவில்லை. இதனால் கோயிலில் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஆறுமுக தீபாராதனை ஒரே நேரத்தில் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து சுவாமி சன்னதி முன்பு விஸ்வபிரம்ம மகாஜன சங்க மண்டகப்படி சாா்பில் சுப்பிரமணியசுவாமி திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் விஸ்வபிரம்ம மகாஜன சங்க தலைவா் எஸ்.சங்கரநாராயணன்(எ)பட்டுசங்கா், செயலா் எம்.ராஜசங்கா், துணைத் தலைவா் ஜி.ஆறுமுகம், துணைச் செயலா் ஏ.மாரியப்பன், பொருளாளா் ஈ.மகேஷ்வரன், நிா்வாகக்குழு உறுப்பினா் கே.எஸ்.மணிகண்டன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com