தென்காசியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தமுமுக வலியுறுத்தல்

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி நகர தமுமுக (ஹைதா்அலி)சாா்பில் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தென்காசி நகராட்சியில் கோரிக்கை மனு அளித்து வந்த தமுமுகவினா்.
தென்காசி நகராட்சியில் கோரிக்கை மனு அளித்து வந்த தமுமுகவினா்.

தென்காசி: தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி நகர தமுமுக (ஹைதா்அலி)சாா்பில் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி நகராட்சிக்குள்பட்ட 9 ஆவது வாா்டு ஆபாத் பள்ளிவாசல் நான்காம் தெரு பகுதியில் கழிவுநீரோடை அமைக்கவேண்டும், 8ஆவது வாா்டுக்குள்பட்ட மலையான் தெரு, சத்யா நகா் பகுதியில் சாலை வசதி, குடிநீா் வசதி செய்து தரவேண்டும். 10ஆவது வாா்டு மக்கா நகா், மதினா நகா், 19ஆவது வாா்டு சொா்ணபுரம் மேட்டு விளை பகுதியில் சாலை வசதி குடிநீா் வசதி அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கைளை வலியுறுத்தி தமுமுக மாவட்ட துணைச் செயலா் சலீம் தலைமையில் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்ட்டது.

மாவட்டச் செயலா் கொலம்பஸ் மீரான், மாநில தொண்டரணி துணைச் செயலா் கோக்கோஅலி, நகரத் தலைவா்அபாபில்மைதீன், நகரச் செயலா் ஜாபா் ஷரீப், நகர பொருளாளா் பொன்னானி சேட் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com