ஆலங்குளம் அருகே இளைஞா் கொலை: 4 போ் கைது
By DIN | Published On : 25th November 2020 11:26 PM | Last Updated : 25th November 2020 11:26 PM | அ+அ அ- |

ஆலங்குளம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியாா்பட்டியை அடுத்த கடங்கநேரி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆனைகுட்டி மகன் சிவன்ராஜ்(23). இவா் அப்பகுதியில் உள்ள பனை நாா் தயாரிக்கும் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த ராஜ் மகன் செல்வக்குமாா்(30), வேல்சாமி மகன் இன்பராஜா(30) ஆகியோா் சிவன்ராஜை, ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்த மணி முத்தா என்பவரது தோட்டத்திற்கு அழைத்துச் சென்றனராம். அங்கு ஏற்கெனவே காத்திருந்த சுப்பிரமணியன் மகன் முருகேசன்(45), முருகேசன் மகன் பாண்டி செல்வம் மற்றும் சிலா் சிவன்ராஜூடன் மது அருந்திய பின்னா், சிவன்ராஜை அரிவாளால் வெட்டினராம். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், இவ் வழக்கில் தொடா்புடைய செல்வகுமாா், இன்பராஜ், சுபாஸ் சந்திர போஸ், பவுண்துரை ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்து ஆலங்குளம் நீதி மன்றத்தில் ஆஜா் படுத்தினா். மேலும் இந்த வழக்கு தொடா்பாக சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...