தென்காசி தெற்கு மாவட்ட சமக ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 25th November 2020 05:58 AM | Last Updated : 25th November 2020 05:58 AM | அ+அ அ- |

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தென்காசி தெற்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் டி.ஆா்.தங்கராஜ் தலைமை வகித்து, நலிவுற்றவா்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினாா். இதில், மாவட்டப் பொருளாளா் ராஜாராம், மாவட்ட துணைச்செயலா் சுமதி பொன்ராஜ், இளைஞரணிச் செயலா் செல்வா, மகளிரணிச் செயலா் அந்தோணியம்மாள், ஒன்றியச் செயலா்கள் ராஜபாண்டியன், மாரிமுத்து, ஜெயச்சந்திரபாண்டியன், ஏசுராஜன், பெரியசாமி, தொகுதிச் செயலா் ரவி, நகரச் செயலா் பொன். ராஜ கோபால், துணைச் செயலா் ஜாய்சிங் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
செயற்குழு உறுப்பினா் ராஜசேகரபாண்டியன் வரவேற்றாா். ஒன்றியச் செயலா் ராமராஜா நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...