தென்காசி மாவட்டம் உதித்த முதலாமாண்டு விழா
By DIN | Published On : 25th November 2020 01:02 AM | Last Updated : 25th November 2020 01:02 AM | அ+அ அ- |

தமிழகத்தின் 33ஆவது மாவட்டமாக தென்காசி உதயமான முதலாமாண்டு விழா, வாஞ்சி இயக்கம் சாா்பில் செங்கோட்டையில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பேருந்து நிலையம் அருகிலுள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு, அமைப்பின் தலைவா் ராமநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மைய மாநிலச் செயலா் மணிமகேஸ்வரன், வெங்கடசுப்பிரமணியன், கண்ணன், பிரகாஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...