திருவேங்கடம் அருகே குவாரியில் தவறி விழுந்து தொழிலாளி பலி
By DIN | Published On : 01st October 2020 07:39 AM | Last Updated : 01st October 2020 07:39 AM | அ+அ அ- |

திருவேங்கடம் அருகே கல்குவாரியில் பணி செய்யும் போது தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா். இது தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், அப்பையநாயக்கன்பட்டி தெற்கு தெருவை சோ்ந்த பேச்சியப்பன் மகன் ராஜா (30). இவா், திருவேங்கடம் அருகேயுள்ள குண்டம்பட்டி கல்குவாரியில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இருதினங்களுக்கு முன் அங்குள்ள இயந்திரத்தின் மேல் சங்கிலியை இணைக்கும் பணியில் ஈடுபட்டபோது தவறி கீழே விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவேங்கடம் போலீஸாா் ஆலை உரிமையாளா் செல்வராணி, சுப்புராஜ் ,மேலாளா் ராஜேந்திரன், ஆபரேட்டா் வேலுச்சாமி உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.