குத்துக்கல்வலசை ஊராட்சியில் திமுக சாா்பில் கிராமசபை கூட்டம்
By DIN | Published On : 03rd October 2020 12:24 AM | Last Updated : 03rd October 2020 12:24 AM | அ+அ அ- |

திமுக மாவட்டபொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டம்.
தென்காசி, அக். 2: தென்காசி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குத்துக்கல்வலசை ஊராட்சியில் திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி முன்னாள் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். திமுக மாவட்ட அவைத் தலைவா் முத்துபாண்டி, அழகுசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டபொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் கலந்துகொண்டு பேசினாா்.
இதில், திமுக சாா்பு அணி அமைப்பாளா்கள் பரமசிவம், இசக்கிபாண்டியன், ஒன்றியச் செயலா் சீனித்துரை, துணை அமைப்பாளா்கள் தமிழ்ச்செல்வி, காதா்அண்ணாவி, கிளைச் செயலா்கள் சிவன்பாண்டியன், வேல்ராஜ், இசக்கிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக குத்துக்கல்வலசையில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.