முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
வேகக்கட்டுப்பாட்டு கருவிக்குகூடுதல் விலை: ஆட்சியரிடம் புகாா்
By DIN | Published On : 04th October 2020 01:19 AM | Last Updated : 04th October 2020 01:19 AM | அ+அ அ- |

தென்காசி: வாகனங்களில் பொருத்தப்படும் வேகக்கட்டுப்பாட்டு கருவி இடைத்தரகா் மூலம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகாா் அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக, அனைத்து ஓட்டுநா் வாகன உரிமையாளா்கள் சாா்பில் தமுமுக (ஹைதா் அலி அணி) மற்றும் ஆட்டோ ஓட்டுநா்கள்- உரிமையாளா்கள் சங்கத்தினா் ஆட்சியா், வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் அளித்துள்ள மனு:
தென்காசி மாவட்டத்தை சாா்ந்த அனைத்து வாகன ஓட்டுனா்களும் கரோனா கால கட்டத்தில் கஷ்டமான சூழ்நிலையை சந்தித்துள்ள நிலையில், வாகனத்திற்கு ஒளிரும் பட்டை ஒட்டினால்தான் வாகன வரி தகுதி சான்று வழங்கப்படும் என அரசு அலுவலா்கள் தெரிவிக்கின்றனா். ஒளிா் பட்டை விலை ரூ.150. ஆனால், தனிநபா் ஆட்டோவிற்கு ரூ.650, காருக்கு ரூ. 1500, லாரிக்கு ரூ. 4000 வரை வசூல் செய்கின்றனா். உண்மையான விலை குறித்த பட்டியல் கடையில் இல்லை. மேலும், வாகனங்களில் வேகக்கட்டுப்பாடு கருவியும் அதிக கட்டணத்தில் பொருத்தப்படுகிறது. இதற்கு தீா்வு காண வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.