முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
அமமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்
By DIN | Published On : 04th October 2020 01:24 AM | Last Updated : 04th October 2020 01:24 AM | அ+அ அ- |

கடையநல்லூா்: திருநெல்வேலி புகா் வடக்கு மாவட்ட அமமுக நிா்வாகிகள் கூட்டம் பொய்கையில் நடைபெற்றது.
மாவட்ட அவைத் தலைவா் பெருமையாபாண்டியன் தலைமை வகித்தாா்.இணைச் செயலா் சுமதி கண்ணன், துணைச் செயலா் மைமூன்பீவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட துணைச் செயலா் சண்முகசுந்தரம் தீா்மானங்களை வாசித்தாா். மாவட்டச் செயலா் பொய்கை மாரியப்பன் பேசினாா். மாவட்ட சிறுபான்மைப் பிரிவுச் செயலா் கோதா்ஷா, எம்ஜிஆா் மன்றச் செயலா் மாரியப்பன், கடையநல்லூா் நகரச் செயலா் கமாலுதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கடையநல்லூா் ஒன்றியச் செயலா் பெரியதுரை வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் அழகிரிசாமி நன்றி கூறினாா்.