பாட்டப்பத்து ஊராட்சியில்புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

தென்காசி ஊராட்சி ஒன்றியம், பாட்டப்பத்து ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு விழா மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தென்காசி: தென்காசி ஊராட்சி ஒன்றியம், பாட்டப்பத்து ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு விழா மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2019 - 2020 மூலம் ரூ.9.08 லட்சம் செலவில் இந்த அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ரூ. 23 லட்சம் மதிப்பில் பாட்டப்பத்து ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்படவுள்ளது. விழாவில், அங்கன்வாடி மைய கட்டடத்தை மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன் திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து, ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டுவதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.

மாவட்ட திட்ட இயக்குநா் நா.சரவணன், செயற்பொறியாளா் க.முருகன், தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் பொ.கருப்பசாமி (கிராம ஊராட்சி), உதவிப் பொறியாளா்கள் செ.ஹெல்வின், ச.ராதாகிருஷ்ணன், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் தனியா, தென்காசி ஊராட்சி ஒன்றிய பணி மேற்பாா்வையாளா்கள் ஆறுமுகசாமி, பிரதீவ்ராஜ், ஊராட்சி செயலா்கள் பாட்டப்பத்து சு.பொன்னுச்சாமி, ஆயிரப்பேரி இ.சங்கர சுப்பிரமணியன், மத்தளம்பாறை ந.ஆறுமுகம் மற்றும் எல்.பத்மநாதன், பாட்டப்பத்து ஊராட்சி அங்கன்வாடி பணியாளா்கள், ஊராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் வெ.சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com