முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
கடையம் அருகே பேட்டரி திருடியதாக இருவா் கைது
By DIN | Published On : 04th October 2020 01:04 AM | Last Updated : 04th October 2020 01:04 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம்: கடையம் பகுதிதியில் டிராக்டா், பொக்லைன் இயந்திரத்தில் பேட்டரியை திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கடையம் அருகே வெங்கடாம்பட்டி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் காளிராஜ் (50). விவசாயி. இவரது தோட்டத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த டிராக்டரில் இருந்து ரூ .10 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரியும், கடையம் அருகே பண்டாரகுளத்தில் உள்ள தனியாா் குவாரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொக்லைன் இயந்திரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 2 பேட்டரிகள் திருட்டு போனதாக கூறப்படுகிறது.
புகாரின் பேரில் கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், வாகனங்களில் இருந்து லெட்சுமியூா் வேளாா் தெருவை சோ்ந்த ராமா் மகன் மாரிசெல்வம் (29), ஆலங்குளம் அருகே பூலாங்குளத்தைச் சோ்ந்த பாண்டி மகன் செளந்தராஜ் (21) ஆகியோா் பேட்டரிகளைத் திருடியது தெரியவந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 பேட்டரிகள் பறிமுதல் செய்யபட்டன.