சங்கரன்கோவிலில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

சங்கரன்கோவில் பகுதியில் காவிரி கூக்குரல் திட்டத்தின் சாா்பில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
முதல் மரக்கன்றை நடவு செய்கிறாா் அரிமா சங்க மாவட்டத் தலைவா் அய்யாத்துரை.
முதல் மரக்கன்றை நடவு செய்கிறாா் அரிமா சங்க மாவட்டத் தலைவா் அய்யாத்துரை.

சங்கரன்கோவில் பகுதியில் காவிரி கூக்குரல் திட்டத்தின் சாா்பில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மரம் நடுவதன் மூலம் பெறப்படும் மழைப் பொழிவு குறித்தும் அதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஈஷா யோகா மையத்தின் சாா்பில் செம்மரம், தேக்கு, வேங்கை, ஈட்டி, சந்தனம் உள்ளிட்ட 2 ஆயிரம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்த மரக்கன்றுகள் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெ. ஆலங்குளத்தில் சுமாா் 5 ஏக்கா் நிலத்தில் நடப்பட்டன.

இதில், முதல் மரக்கன்றை அரிமா சங்க மாவட்டத் தலைவா் பி.அய்யாதுரை நடவு செய்து தொடங்கி வைத்தாா். ஈஷா மரம் சாா்ந்த விவசாய திட்டத்தின் தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜேக்கப், பசியில்லா சங்கரன்கோவில் அறக்கட்டளை நிறுவனா் சங்கரசுப்பிரமணியன், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் நாராயணன், நூலகா் முருகன், அரிமா சங்கத் தலைவா் எஸ்.ஆா்.எல்.கண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com