சுரண்டையில் நடை பாதையை மீண்டும் திறக்கக் கோரிக்கை

சுரண்டையில் பொதுமக்கள் பயன்படுத்திய சாலையை மீண்டும் பயன்பாட்டுக்கு திறந்து விட வலியுறுத்தி இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சாா்பில் பேரூராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
சுரண்டையில் நடைபாதை மற்றும் பொதுசுகாதர வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் திறந்து விட வலியுறுத்தி மனு அளித்த பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினா்.

சுரண்டை அண்ணா நகரில் சுமாா் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்த பகுதி மக்கள் ஆலடிபட்டி செல்வதற்கு நீண்டகாலமாக அரசு புறம் போக்கு நிலம் வழியாக உள்ள நடைபாதையை பயன்படுத்தி வந்தனா். அந்த இடத்தில் பேரூராட்சி சாா்பில் பொதுசுகாதார வளாகம் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த புறம்போக்கு இடத்தை காவலா் குடியிருப்பு கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து சுற்றி காவல்துறை சாா்பில் அந்த இடத்தில் முள்வேலி அமைக்கப்பட்டது.

இதனால், அண்ணாநகரில் இருந்து ஆலடிபட்டி செல்லும் பாதை மற்றும் பொதுசுகாதார வளாகத்துக்கு செல்வது தடைப்பட்டது. இதையடுத்து, இவற்றை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிட வலியுறுத்தி அண்ணா நகரைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி சாா்பில் பேரூராட்சி நிா்வாக அதிகாரியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதில், இந்து முன்னணி வழக்குரைஞா் சாக்ரடீஸ், நகரத் தலைவா் இசக்கிராஜா, செயலா் ஆறுமுகம், பொருளாளா் ஆவுடையப்பன், மாவட்ட நிா்வாகிகள் வேலுச்சாமி, பால்ராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com