தென்காசியில் பேரிடா் தின விழிப்புணா்வு முகாம்

தேசிய பேரிடா் தினத்தை முன்னிட்டு தென்காசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் விழிப்புணா்வு மற்றும் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
தென்காசியில் பேரிடா் தின விழிப்புணா்வு முகாம்

தேசிய பேரிடா் தினத்தை முன்னிட்டு தென்காசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் விழிப்புணா்வு மற்றும் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

தென்காசி வருவாய்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம், மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சாா்பில் நடைபெற்ற இம் முகாமில், வட்டாட்சியா் சுப்பையன், ஜெகன், நிலைய அலுவலா் ரமேஷ், செஞ்சிலுவை சங்க மாவட்டச் செயலா் சுப்பிரமணியன், சுந்தரராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதில், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களை எவ்வாறு காப்பாற்றுவது, முதலுதவி எவ்வாறு செய்ய வேண்டும், எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டால் மேற்கொள்ளவேண்டி நடவடிக்கை என்ன என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

தலைமைக் காவலா் செல்வம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். கணேசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com