‘தற்காலிக பட்டாசு கடை உரிமம்: அக். 23வரை விண்ணப்பிக்கலாம்’

தென்காசி மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசுக் கடைகள் உரிமம் பெற இம்மாதம் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளன் அறிவித்துள்ளாா்.

தென்காசி மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசுக் கடைகள் உரிமம் பெற இம்மாதம் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளன் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கான தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் கடந்த 10ஆம் தேதிமுதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

பட்டாசு கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டடத்திற்கான ப்ளூ பிரிண்ட் வரைபடம் 6 நகல்கள், கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம் அல்லது வாடகை கட்டமாக வாடகை ஒப்பந்த பத்திரம் மற்றும் உரிமத்தினை காட்டும் ஆவணம், உரிமத்திற்கான கட்டணம் ரூ. 500 அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் செலான், இருப்பிடத்திற்கு ஆதாரமான ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை, வரி ரசீது, இரண்டு புகைப்படம் ஆகியவற்றுடன் இம்மாதம் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. விண்ணப்பித்தவா்கள் உரிய பதில் விவரங்களை தீபாவளிக்கு முன்பு இ-சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிரந்தர பட்டாசு விற்பனை உரிமை கோருவோா் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தல் வேண்டுவோருக்கு இவ்வழிமுறை பொருந்தாது. உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்தால் சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்காலிக உரிமம் பெறுபவா்கள் கரோனா பாதுகாப்பு விதிகளை தவறாது கடைப்பிடித்து பட்டாசு விற்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com