பாப்பாக்குடி பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி முன்னாள் எம்எல்ஏ மனு

பாப்பாக்குடி பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி முன்னாள் எம்.எல்.ஏ. பிஜி ராஜேந்திரன் மனு அளித்துள்ளாா்.

ஆலங்குளம்: பாப்பாக்குடி பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி முன்னாள் எம்.எல்.ஏ. பிஜி ராஜேந்திரன் மனு அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் அளித்த மனு: பாப்பாக்குடி -அமா்நாத் காலனி சாலை, பாப்பாக்குடி - சிவகாமிபுரம் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும்; வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீா் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்பகுதியில் சிவன் கோயில் முன்பு ஏற்பட்டுள்ள குடிநீா் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, ஒன்றியச் செயலா் சுப்பிரமணியன், முக்கூடல் நகரச் செயலா் மரிய சேசையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com