ஆலங்குளம் கல்வி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

தென்காசி: ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஆட்சியா், முதன்மை கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் ராஜ்குமாா், மாவட்டச் செயலா் செ. பால்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் பிரம்மநாயகம், ஆலங்குளம் வட்டாரத் தலைவா் ராஜேந்திரன், செயலா் சிவகுமாா் உள்ளிட்டோா் ஆட்சியா், முதன்மை கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா் ஆகியோரிடம் அளித்த மனு: தோ்வு நிலை, சிறப்பு நிலை காலங்களை முடித்து பணப்பலன்களை வழங்கக் கோரும் ஆசிரியா்களின் விண்ணப்பங்களை உள்நோக்கத்தோடு கால தாமதம் செய்து பணப் பலன்களை வழங்குவதில்லை.

மேலும் பாடப் புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்ட 14 வகையான நலத் திட்ட விலையில்லாப் பொருள்களை பள்ளிகளுக்கு சென்று வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. நேரடியாக வழங்கும் செலவுத் தொகையும் அரசால் வழங்கப்படுகிறது. ஆனால் ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலா் பள்ளி தலைமையாசிரியா்களை ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிக்கு வர வழைத்து விநியோகம் செய்து அரசு பணத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறாா். ஆகவே, ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com