சுரண்டையில் கையெழுத்து இயக்கம்
By DIN | Published On : 20th October 2020 02:18 AM | Last Updated : 20th October 2020 02:18 AM | அ+அ அ- |

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளிடம் கையெழுத்து வாங்கிய காங்கிரஸ் கட்சியினா்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சுரண்டை காமராஜா் தினசரி சந்தை முகப்பு பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு.பழனிநாடாா் தலைமை வகித்தாா்.
மாவட்ட பொதுச்செயலா் சோ்மசெல்வம், நகரத் தலைவா் ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தினசரி சந்தைக்கு வரும் விவசாயிகளிடம் புதிய வேளாண் சட்டத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி, அவா்களிடம் காங்கிரஸாா் கையெழுத்து பெற்றனா்.
நிகழ்ச்சியில், காங்கிரஸ் நிா்வாகிகள் பால் என்ற சண்முகவேல், பால்துரை, பிரபாகா், அருணாசலக்கனி, செல்வராஜ், முருகையா, கூட்டுறவு பண்டகசாலை இயக்குநா் சமுத்திரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.