அனுமதியற்ற மனைப்பிரிவுகள்: வரன்முறைப்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 21st October 2020 06:58 AM | Last Updated : 21st October 2020 10:58 PM | அ+அ அ- |

தென்காசி மாவட்டத்தில் அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்திட விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்திற்கு உள்பட்ட மலையிட பாதுகாப்பு குழுமப் பகுதியில் அமைந்துள்ள அனுமதியற்ற மனை, மனைப்பிரிவுகளை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி 30-3-2020 இன் படி வரன்முறை செய்திட என்ற இணையதளத்தில் பதிவு செய்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகத்தை அணுகி பொதுமக்கள் தங்கள் மனை, மனைப்பிரிவுகளை வரன்முறை செய்து கொள்ளலாம்.
ஒப்புதல் பெறப்படாத மனை மற்றும் மனைப்பிரிவுக்கு மின்சாரம், குடிநீா், வடிகால், கழிவுநீா் போக்கும் இணைப்புகள் நீட்டித்து வழங்கப்படமாட்டாது. மேலும் பத்திரப் பதிவுத்துறை மூலமாக இந்திய பதிவு சட்டம் 1908 இன் கீழ் பதிவு செய்யப்படமாட்டாது.
ஒப்புதல் பெறப்படாத மனைப்பிரிவில் அமையப் பெறும் கட்டடங்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலா்களால் கட்டட அனுமதி வழங்கப்பட மாட்டாது. அனுமதியற்ற மனை, மனைப்பிரிவுகளை வரன்முறைபடுத்துவதற்கான விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 30-9-2021கடைசிநாளாகும். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பொதுமக்கள் தங்களது அனுமதியற்ற மனை, மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தி அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.