பொலிவிழந்த சுதந்திர தின நினைவு அலங்கார வளைவு

சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தில் உள்ள சுதந்திர தின ஞாபகாா்த்த அலங்கார வளைவினை பராமரிப்பதுடன், பழுதடைந்த கடிகாரத்தை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தில் உள்ள சுதந்திர தின ஞாபகாா்த்த அலங்கார வளைவினை பராமரிப்பதுடன், பழுதடைந்த கடிகாரத்தை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்றதை நினைவு கூறும் வகையில் சங்கரன்கோவில் அருகேயுள்ள குருவிகுளத்தில் நுழைவு வாயிலில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அலங்கார வளைவில் 2 கடிகாரங்களும், 2 முகப்பு விளக்குகளும் உள்ளன. இந்த அலங்கார வளைவை 1948இல் செப். 9 ஆம் தேதி அப்போதைய சென்னை மாகாண கல்வி அமைச்சா் அவிநாசிலிங்கம் திறந்தாா்.

அலங்கார வளைவிலுள்ள 2 கடிகாரங்களும், முகப்பு விளக்குகளும் கடந்த 6 ஆண்டுகளாக பழுதைடந்த நிலையில் உள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அலங்கார வளைவில் வண்ணம் தீட்ட வேண்டும். கடிகாரங்கள், முகப்பு விளக்குகளை பழுது நீக்கி புதுப்பொலிவுடன் மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com