கடையநல்லூரில் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 11th September 2020 05:57 AM | Last Updated : 11th September 2020 05:57 AM | அ+அ அ- |

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி கடையநல்லூரில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அமைப்பின் தென்காசி மாவட்டக் கிளை சாா்பில் கடையநல்லூரில் மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் லுக்மான் ஹக்கீம் தலைமை வகித்தாா். அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினா் முகமதுஅலிஜின்னா, மாவட்டச் செயலா் அப்துல் பாசித், எஸ்டிபிஐ கட்சியின் தென்காசி மாவட்டத் தலைவா் ஜாபா் அலி உஸ்மானி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.