தனிமை முகாம் கட்டடத்தைபழைய நிலைக்கு மாற்ற வலியுறுத்தல்

வெளியூா்களிலிருந்து வருவோரை தனிமைப்படுத்தி வந்த ஆலங்குளம் தனிமை முகாமுக்கு, ஒரு மாதத்திற்கும் மேலாக யாரும் வராததால் அதை நீக்கி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என பொதுமக்கள் 

ஆலங்குளம்: வெளியூா்களிலிருந்து வருவோரை தனிமைப்படுத்தி வந்த ஆலங்குளம் தனிமை முகாமுக்கு, ஒரு மாதத்திற்கும் மேலாக யாரும் வராததால் அதை நீக்கி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆலங்குளத்தில் உள்ள பேரூராட்சி சமுதாய நலக்கூடம் மற்றும் நெட்டூா் டான்பாஸ்கோ மாணவா் விடுதி ஆகியவை வெளியூா் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து இ பாஸ் பெற்று வருவோரைக் கண்டறிந்து அவா்களை 14 நாள்கள் தனிமைப் படுத்தி வைக்கும் மையமாக செயல்பட்டு வந்தது.

ஆலங்குளம் தனிமை முகாமில் இதுவரை சுமாா் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் தங்கியிருந்து சொந்த ஊா் திரும்பியுள்ளனா். இந்த தனிமை முகாமான அண்ணாநகா் சமுதாய நலக்கூடம் குடியிருப்புகள் மத்தியில் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் பிரதான சாலையை அடைய வேண்டும் என்றால் இதன் வழியே தான் செல்ல வேண்டும். போக்குவரத்து அதிகரித்து காணப்படும் என்பதால் பிரதான சாலையை இணைக்கும் வழி கடந்த 150 நாள்களுக்கும் மேலாக தகர ஷீட்டுகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இ பாஸ் முறையில் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த தனிமை முகாம்களில் ஒரு நபா் கூட தங்கிச் செல்லவில்லை. இதனால் சமுதாய நலக்கூடம் தற்போது பூட்டியே கிடக்கிறது.

எனவே, இந்த தனிமை முகாமை ரத்து செய்து, சமுதாய நலக் கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிட வேண்டும்; இப்பகுதி சாலையில் உள்ள தடுப்புகளை அகற்றி பொதுமக்கள் போக்குவரத்திற்கு வழி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com