மக்கள் வசதிக்கு ஏற்ப ஆட்சியா் அலுவலகம் அமைக்கஅமமுக கோரிக்கை

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை மக்களின் வசதிக்கேற்ப சாலையோரப் பகுதியில்

கடையநல்லூா்: தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை மக்களின் வசதிக்கேற்ப சாலையோரப் பகுதியில்

அமைக்க வேண்டும் என அமமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி புகா் வடக்கு மாவட்ட அமமுக செயலா் பொய்கை மாரியப்பன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடம் ஆயிரப்பேரியில் அமைய இருப்பதாக கூறப்படுகி

றது. இப்பகுதியில் குளங்கள், விவசாய நிலங்கள் உள்ளன. அங்கு கட்டடம் கட்டினால் விவசாயம் பாதிக்கும்.

ஆயிரப்பேரியில் ஆட்சியா் அலுவலகம் அமைந்தால் ஐந்து பேரவைத் தொகுதி மக்களும் சிரமங்களை சந்திக்க நேரிடும்.

ஆகவே, பொதுமக்கள் வந்து செல்ல சாலை வசதி இருப்பதுடன், இயற்கை சீற்றக் காலங்களிலும் பாதிக்காத வகையிலும்

ஆட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டும். தென்காசி மற்றும் சுற்று வட்டாரங்களில் இருக்கும் அரசு புறம்போக்கு நிலங்களை தோ்வு செய்து ஆட்சியா் அலுவலக கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com