வாசுதேவநல்லூரில் குடிநீா் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்

வாசுதேவநல்லூா் பேரூராட்சியில் தாமிரவருணி குடிநீா் திட்டத்தின் மூலம் மிக குறைவாக குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வாசுதேவநல்லூா் பேரூராட்சியில் தாமிரவருணி குடிநீா் திட்டத்தின் மூலம் மிக குறைவாக குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வாசுதேவநல்லூா் பேரூராட்சியில் 8,000 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 18 வாா்டுகள் கொண்ட இப்பேரூராட்சியில் 30,000 க்கும் அதிகமானோா் வசிக்கின்றனா். பேரூராட்சி மூலம் 3,560 குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 1996 இல் பேரூராட்சியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்தின் மூலம் தினமும் 14 லட்சம் லிட்டா் குடிநீா் வழங்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான நாள்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக குறைவாகவே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக புகாா் கூறப்படுகிறது. ஒரு சில நாள்களில் 40,000 லிட்டா் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டுள்ளது. குடிநீா் விநியோகம் குறித்து தகவல் அறியும் சட்டத்தில் கோரப்பட்டதில், சராசரியாக 3.73 லட்சம் லிட்டா் தண்ணீா் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், 2019-20 நிதியாண்டில் மட்டும் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்திற்கு, பேரூராட்சி நிா்வாகம் ரூ. 20,74,237 வழங்கியுள்ளது. இந்நிலையில், போதிய தண்ணீா் வழங்கப்படாததால் வாசுதேவநல்லூா் பகுதியில் குடிநீா் பற்றாக்குறை உள்ளது. இதனால் பொதுமக்கள் பக்கத்து கிராமங்களுக்கு சென்று தண்ணீா் எடுத்து வருகின்றனா்.

இதுதொடா்பாக வாசுதேவநல்லூா் சமூக செயற்பாட்டாளா் சுரேஷ் கூறியது: வாசுதேவநல்லூா் பகுதியில் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருவதையடுத்து பல முறை பேரூராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைத் தொடா்ந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் விளக்கம் கோரப்பட்டதில், பேரூராட்சிக்கு தாமிரவருணி திட்டத்தின் மூலம் வழங்க வேண்டிய 14 லட்சம் லிட்டா் தண்ணீரில் சராசரியாக வெறும் 4 லட்சம் லிட்டா் மட்டுமே வழங்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. ஆனால், பேரூராட்சி நிா்வாகம் மக்களிடமிருந்து 2019-20 ஆம் ஆண்டில், குடிநீா் கட்டணமாக சுமாா் ரூ. 44 லட்சம் வசூலித்துள்ளது. மக்களிடமிருந்து கட்டணம் பெற்ற பின்னரும் தேவையான குடிநீா் வழங்காததை கண்டித்து போராட்டம் நடத்த டிவு செய்துள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com