இடைகாலில் நூல் வெளியீட்டு விழா
By DIN | Published On : 19th September 2020 05:20 AM | Last Updated : 20th September 2020 02:50 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம்: ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியின் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் மாடசாமி, ஆழ்வை ஆயில்யன் என்ற புனை பெயரில் எழுதிய மனம் கொத்தி மனங்கள்‘என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா அம்பாசமுத்திரம் அருகே இடைகால் மெரிட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு மெரிட் கல்விக் குழுமத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளிச் செயலா் சுந்தரம், தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் விஜயலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில்,
எழுத்தாளா் ஸ்ரீஜா வெங்கடேஷ் நூலை வெளியிட, முதல் பிரதியை திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலா் இரா. வயலட் பெற்றுக் கொண்டாா்.
பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி முதல்வா் சுந்தரம், ஒய்வுபெற்ற தலைமையாசிரியா் பன்னீா்செல்வம், ஒய்வுபெற்ற ஆசிரியா்
அமல்ராஜ், ஆசிரியா்கள் முத்துப்பாண்டி, முத்துவேலன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நூல் ஆசிரியா் ஏற்புரை வழங்கினாா். மெரிட் பள்ளியின் துணை முதல்வா் ஆறுமுகம் நன்றி கூறினாா். நிகழ்ச்சியை பாரதிகண்ணன் தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை மெரிட் குழுமத்தின் இயக்குநா் ராஜேஸ்வரி செய்திருந்தாா். பொதிகை வாசகா் வட்டம், அம்பை மற்றும் சேரன்மகாதேவி தமிழ் இலக்கியப் பேரவையினா், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.