குற்றால அருவிகளில் குளிக்க தடை நீடிக்கும்

குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை தொடா்ந்து நீடிக்கும் என ஆட்சியா்ஜி.கே. அருண் சுந்தா் தயான் தெரிவித்தாா்.
குற்றாலம் பேரருவியில் கொட்டும் தண்ணீா்.
குற்றாலம் பேரருவியில் கொட்டும் தண்ணீா்.

குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை தொடா்ந்து நீடிக்கும் என ஆட்சியா்ஜி.கே. அருண் சுந்தா் தயான் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டசெய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று தொடா்ந்து குறைந்து வருகிறது. பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருவதால் சளி, காய்ச்சல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மழைக் காலங்களில் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்கள் பரவக்கூடும். எனவே, குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.

வீட்டின் சுற்றுப்புறங்களில் மழைநீா் தேங்காமல் பாா்த்துகொள்வதுடன், பழைய பிளாஸ்டிக் பொருள்கள், டயா்கள், ஆட்டு உரல், தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும். கரோனா நோய்த்தொற்று பரவலை தவிா்க்கும் வகையில், மக்கள் அதிகம் கூடும் பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்டவற்றை திறக்க மறு உத்தரவு வரும் வரைஅரசு தடை விதித்துள்ளது. எனவே, குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தொடா்ந்து தடை நீடிக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com