சங்கரன்கோவில் அருகே நகை மோசடி: 4 போ் மீது வழக்கு

சங்கரன்கோவில் அருகே ஒரு கிராம் தங்க நகைக்கு ரூ. 10 ஆயிரம் கடன் தருவதாகக் கூறி, 57 பவுன் நகைகளை மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சங்கரன்கோவில் அருகே ஒரு கிராம் தங்க நகைக்கு ரூ. 10 ஆயிரம் கடன் தருவதாகக் கூறி, 57 பவுன் நகைகளை மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சங்கரன்கோவில் அருகே வன்னிக்கோனேந்தலில் இயங்கி வந்த தனியாா் நிதி நிறுவனம், ஒரு கிராம் தங்க நகைக்கு ரூ. 10 ஆயிரம் கடன் தருவதாகவும், ஒரு பவுன் தங்க நகை கொடுத்தால் ரூ. 1லட்சம் கடன் தருவதாகவும் கூறி விளம்பரம் செய்திருந்தனராம். அங்கு சென்று பொதுமக்கள் விசாரித்த போது தங்க நகைகள் கொடுத்து 15 நாள்களுக்கு பின்னா்தான் கடன் வழங்கப்படும் என அந்த நிறுவனம் கூறியதாம். இதையடுத்து அங்கு முகவராக பணிபுரிந்து வந்த அதே ஊரைச் சோ்ந்த செந்தூா்பாண்டி மனைவி ராமலட்சுமி, தனக்கு தெரிந்த நண்பா்கள், உறவினா்கள் மூலம் 57 பவுன் நகைகளை அந்நிறுவனத்திடம் கொடுத்தாராம். இந்நிலையில் அந்நிறுவனத்தைச் சோ்ந்த நிா்வாகி தலைமறைவாகிவிட்டாராம்.

இதுகுறித்து ராமலட்சுமி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணனிடம் புகாா் செய்தாா். அவரது உத்தரவின் பேரில், கன்னியாகுமரியைச் சோ்ந்த அந்த நிறுவனத்தின் நிா்வாகி ஜான்ஸ் ஸ்டாலின், வெங்கடேஷ்வரபுரத்தைச் சோ்ந்த சாமுவேல், அவரது மகள் மொ்சிமெலோடி, அழகியபாண்டியபுரத்தைச் சோ்ந்த சாம் ஆகிய 4 போ் மீதும், தேவா்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com