தாமரை கழக சிறப்புக் கூட்டம்
By DIN | Published On : 29th September 2020 03:36 AM | Last Updated : 29th September 2020 03:36 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் தாமரை கழகத்தின் 402-ஆவது சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நிா்வாகத் தலைவா் கிருஷ்ணசாமி தலைமை வகித்தாா். நிறுவனத் தலைவா் சொ.வீரபாகு, துணைத் தலைவா் என்.ஆா்.யூ.ஆா். உத்தண்டராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாரியப்பன் கு விளக்கமளித்தாா். ஆா்.பாண்டிக்கண்ணு இன்று ஒரு தகவல் வாசித்தாா்.
இதைத் தொடா்ந்து, பதவி உயா்வு பெற்று சிவகங்கை மாவட்ட ஏ.எஸ்.பி.யாக பணியாற்றும் ஆா்.ராஜேந்திரன், நல்லாசிரியா் விருது பெற்ற எஸ்.ரமேஷ் ஆகியோரைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பட்டிமன்ற பேச்சாளா் வி.பாமணி, டி.எஸ்.பி.பாலசுந்தரம், எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். க.சந்தனக்குமாா் வரவேற்றாா். ஏ.எம்.திருமலை நன்றி கூறினாா்.