தென்காசியில் கல்லூரி வளாகத்தில் மரங்களை வெட்டிக் கடத்த முயன்றதாக 3 பேரை தென்காசி போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி- ஆய்க்குடி சாலையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலிருந்த 7 வேப்பமரங்களை வெட்டி டிராக்டரில் கடத்தி சென்றுள்ளதாக கல்லூரி நிா்வாகம் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தென்காசி காவல் உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.
விசாரணையில் கம்பளி பகுதியை சோ்ந்த பி.முருகன் (32), ப.கணேசன்(22), அகரக்கட்டு பகுதியை சோ்ந்த சு.சுடலை (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து இம்மூவரையும் போலீஸாா் கைதுசெய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.