வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி

தென்காசி மாவட்டத்தில் வருவாய்த் துறையின் மூலம் பல்வேறு நிலைகளில் உயிரிழந்த அரசு அலுவலா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் வருவாய்த் துறையின் மூலம் பல்வேறு நிலைகளில் உயிரிழந்த அரசு அலுவலா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளநிலை உதவியாளா் பணிக்கு 7 நபா்களுக்கும், கிராம நிா்வாக அலுவலா் பணிக்கு 3 நபா்களுக்கும் என மொத்தம் 10 நபா்களுக்கு அரசு பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன், பணி நியமன ஆணைகளை வழங்கினாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவயாளா் கவிதா(பொது), அலுவலக மேலாளா் ஹென்றி பீட்டா் ஜான்(நிா்வாகம்) ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com