தென்காசி மாவட்ட நிா்வாகம் சாா்பில் கரானா, டெங்கு பரவலைத் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா்கீ.சு. சமீரன் தலைமை வகித்துப் பேசியது: தமிழகத்தில் அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வருவாய், பொது சுகாதாரம், உள்ளாட்சி, காவல் துறைகள் மூலம் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொதுஇடங்களில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதுடன், முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்டோருக்கு அதிகாரிகள் அபராதம் விதிக்கவேண்டும். தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தவும், தண்ணீா்த் தொட்டிகளை சுத்தப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளில் அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா்சரவணன், இணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் மருத்துவா் நெடுமாறன், துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் மருத்துவா் அருணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.