முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
குற்றாலம் கோயிலில் சித்திரை விஷு திருவிழா நாளை தொடக்கம்
By DIN | Published On : 04th April 2021 02:12 AM | Last Updated : 04th April 2021 02:12 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதா் சமேத குழல்வாய்மொழியம்மன் கோயிலில் சித்திரை விஷு திருவிழா திங்கள்கிழமை (ஏப். 5) தொடங்குகிறது.
இதையொட்டி, அதிகாலை 5.20 க்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடா்ந்து, திருவிலஞ்சிக்குமாரா் வருகை, மாலையில் வெள்ளிச் சப்பரத்தில் வீதியுலா, சுவாமி, அம்மன் மாலையில் ஏக சிம்மாசனத்தில் வீதியுலா நடைபெறுகிறது.
4ஆம் நாளான ஏப். 8 ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, 9ஆம் தேதி காலை தேரோட்டம், 11ஆம் தேதி காலை 9.30 க்கும், இரவு 7 மணிக்கும் நடராசமூா்த்திக்கு தாண்டவ தீபாராதனை, 12ஆம் தேதி சித்திரசபையில் நடராசமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை, 14ஆம் தேதி சித்திரை விஷு தீா்த்தவாரி நடைபெறுகிறது.
விழா நாள்களில் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, திருவிலஞ்சிக்குமாரா், சுவாமி -அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மா. கண்ணதாசன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.