முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
சங்கரன்கோவிலில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 04th April 2021 02:13 AM | Last Updated : 04th April 2021 02:13 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ராஜலெட்சுமி வெள்ளிக்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
திருவேங்கடம் சாலை, கழுகுமலை சாலை, பாரதியாா் தெரு, கோமதியாபுரம் தெரு, வடகாசியம்மன்கோயில் தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.
கழுகுமலை சாலையில் உள்ள பள்ளிவாலுக்குச் சென்று அங்கு தொழுகை முடிந்து வெளியே வந்தவா்களிடம் அவா் வாக்கு சேகரித்தாா்.
இதில், நகரச் செயலா் ஆறுமுகம், பொருளாளா் வேலுச்சாமி, பேச்சாளா் கணபதி, நவநீதகிருஷ்ணன், மாரியப்பன்,
முன்னாள் நகராட்சி உறுப்பினா்கள் ஜெயலெட்சுமி, சின்னராஜ், முத்துக்குட்டி, ராமதுரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.