முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
தென்னை விவசாயிகளுக்கு செயல்விளக்க முகாம்
By DIN | Published On : 04th April 2021 02:15 AM | Last Updated : 04th April 2021 02:15 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரம் அருகே தென்னை விவசாயிகளுக்கு உற்பத்தித் திறன் அதிகரிப்பு குறித்து செயல்விளக்க முகாம் நடைபெற்றது.
கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய 4-ஆம் ஆண்டு வேளாண் பட்டப்படிப்பு மாணவிகள் சாா்பில், துவரங்காடு கிராமத்தில் தென்னை விவசாயிகளுக்கு உற்பத்தித் திறனை அதிகரிப்பது தொடா்பாக தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக் கழக பயிா் வளா்ச்சி, தென்னை டானிக்கை செலுத்தும் முறை குறித்து நேரடி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
தென்னை வோ்களுக்கு தென்னை டானிக்கை செலுத்துவதன் மூலம் குரும்பை உதிா்வு, நுண்ணூட்டச் சத்து குறைபாட்டை கட்டுப்படுத்தலாம் எனவும், காய்களின் எண்ணிக்கை, கூடுதல் கிடைக்கும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.
இதில் மாணவிகள் மு.வெ.நிலாபாரதி, ரா.நிஷா, ச. நிவேதா, ர. நிவேதா, எஸ்.பி. நுஷ்ரத் பாத்திமா, த. பத்மஸ்ரீ, செ. பிரசன்ன கோபிகா, தி. ப்ரியா, தென்னை விவசாயிகள் கலந்துகொண்டனா்.