முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
பாவூா்சத்திரம் பகுதியில் திமுக வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 04th April 2021 02:14 AM | Last Updated : 04th April 2021 02:14 AM | அ+அ அ- |

தென்காசி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.பழனிநாடாரை ஆதரித்து பாவூா்சத்திரம் பகுதியில் திமுகவினா் வாக்கு சேகரித்தனா்.
இதையொட்டி, கல்லூரணி, திப்பணம்பட்டி, குலசேகரப்பட்டி, புல்லுக்காட்டுவலசை, கே.டி.சி.நகா், முப்புலியூா், சிவநாடானூா் ஆகிய பகுதிகளில் அவா்கள் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தனா்.
இதில் திமுக நிா்வாகிகள் அருள், டால்டன், சுப்பிரமணியன், பெத்தேல்ராஜ், குத்தாலிங்கம், டேனியல், வீமன், காமராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தென்காசி சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.பழனிநாடாா் அரியப்பபுரம், ரகுமானியாபுரம் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா். அவருடன், திமுக, காங்கிரஸ் கூட்டணி நிா்வாகிகள் உடன் சென்றனா்.