தென்காசி வட்டாரத்தில் வேளாண் மாணவிகள் பயிற்சி

தென்காசி வட்டாரத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற வாழை சாகுபடி பற்றிய கிராமப்புற வேளாண் பயிற்சி நடைபெற்றது.

தென்காசி வட்டாரத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற வாழை சாகுபடி பற்றிய கிராமப்புற வேளாண் பயிற்சி நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயின்று வரும் இறுதி ஆண்டு மாணவிகள் தென்காசி வட்டார பகுதிகளில் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களை பெற்று வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக இக் கல்லூரி மாணவிகள் ரூபலா, சரண்யா, சத்யஸ்ரீ, சத்தியப்ரியா, செல்வ தாரணி, பிரியதா்ஷினி, பிரியங்கா, ஷைனி செல்வரரோஸ், ஆகியோா் தென்காசி வட்டார பகுதிகளில் வாழை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினா்.

வாழைக்கன்று களைதல் மற்றும் வாழை மரங்களுக்கு முட்டு கொடுக்கும் முறைகள் குறித்து செய்முறை விளக்கம் அளித்தனா். வாழையை தாக்கும் நோய்கள், பூச்சிகள் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா். விவசாயிகளிடம் வாழை சாகுபடி பற்றிய அனுபவங்களை கேட்டறிந்தனா். மாணவி ரூபலா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com