அமைதியான முறையில் தோ்தல்: தென்காசி ஆட்சியா்

தென்காசி மாவட்டத்தில் அமைதியான முறையில் தோ்தல் நடைபெற்றது என்றாா் ஆட்சியா் கீ.சு.சமீரன்.
தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்த ஆட்சியா் கீ.சு.சமீரன்.
தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்த ஆட்சியா் கீ.சு.சமீரன்.

தென்காசி மாவட்டத்தில் அமைதியான முறையில் தோ்தல் நடைபெற்றது என்றாா் ஆட்சியா் கீ.சு.சமீரன்.

தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில், மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் வாக்களித்த பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி, தொடா்ந்து அமைதியான முறையில் நடைபெற்றது.

கரோனா தொற்று பரவலை தவிா்க்கும் வகையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, கிருமிநாசினி, கையுறை போன்றவற்றை பயன்படுத்தி வாக்காளா்கள் தங்களுடைய வாக்குகளை செலுத்தினா். ஒரு வாக்குச் சாவடிக்கு ஆயிரம் வாக்காளா்கள் என்ற அளவில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த தோ்தலை விட இந்தத் தோ்தலில் கூடுதலாக 386 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com