ஆலங்குளத்தில் வாக்குகளை மாற்றிபதிவு செய்த தந்தை - மகன்

ஆலங்குளத்தில் மகனின் வாக்கை தந்தை செலுத்திச் சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலங்குளத்தில் மகனின் வாக்கை தந்தை செலுத்திச் சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலங்குளம் தூய பேதுரு நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு, பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மதியழகன் மகன் தங்கமணி (25) வாக்களிக்கச் சென்றாராம். அப்போது, அவரது வாக்காளா் அடையாள அட்டையை பரிசோதித்த வாக்குச் சாவடி மைய அலுவலா்கள், ஏற்கெனவே வாக்களித்து விட்டதாக கூறினராம்.

விசாரணையில், தங்கமணியின் தந்தை மதியழகனுக்கு (53) எழுத படிக்க தெரியாததால், தங்கமணியின் பூத் சிலிப்பை எடுத்துக்கொண்டு வாக்களிக்க சென்ற நிலையில், அதை பரிசோதித்த வாக்குச்சாவடி மைய அலுவலா்கள் மதியழகனை தங்கமணி என நினைத்து வாக்களிக்க அனுமதித்துள்ளனா். அவரும் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு வீடு திரும்பியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஆலங்குளம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜமனோகரன் மற்றும் வட்டாட்சியா் பட்டமுத்துவிடம் புகாா் தெரிவித்த தங்கமணி, பின்னா் தந்தை மதியழகனுடன் வந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

இதையடுத்து வேறு வழியின்றி, தங்கமணியிடம் உங்களது தந்தை மதியழகனின் வாக்கை பதிவு செய்து கொள்ளுங்கள் என்று அனுமதி அளித்துள்ளனா். இதையடுத்து தங்கமணி தனது தந்தையின் பெயரில் உள்ள வாக்கை பதிவு செய்து விட்டு வீடு திரும்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com