தென்காசி மாவட்டத்தில் 72.58 சதவீத வாக்குப்பதிவு

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவில் 72.58 சதவீத வாக்குகள் பதிவாகின.
தென்காசி மாவட்டத்தில் 72.58 சதவீத  வாக்குப்பதிவு

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவில் 72.58 சதவீத வாக்குகள் பதிவாகின.

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூா்(தனி), கடையநல்லூா், தென்காசி, ஆலங்குளம் ஆகிய ஐந்து சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, இரவு 7 மணி வரை நடைபெற்றது. சில வாக்குசாவடி மையங்களில் அதிகளவில் வாக்காளா்கள் வந்ததையடுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு வாக்களித்தனா்.

மாவட்டத்தில் 143 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு 143 நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டனா். 1,584 காவல்துறையினா், 360 துணை இராணுவ வீரா்கள், 250 ஊா்க்காவல்படையினா், மற்றும் கா்நாடக மாநிலத்தில் இருந்து 250 காவல்துறையினரும் நியமிக்கப்பட்டு கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனா். 1,016 வெப்கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டது.

சங்கரன்கோவில் தொகுதியில் மொத்தம் 2,53,310 வாக்காளா்கள் உள்ளனா். இதில் , 87, 063 ஆண், 93, 998 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 181051போ் வாக்களித்துள்ளனா். இது 71.47 சதவீதமாகும்.

வாசுதேவநல்லூா் தொகுதியில் மொத்தம் 2,41,109 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 82, 747 ஆண், 90, 091 பெண்வாக்காளா்கள் என மொத்தம் 1 ,72, 838 போ் வாக்களித்துள்ளனா். இது 71.68 சதவீதமாகும்.

கடையநல்லூா் தொகுதியில் மொத்தம் 2, 89, 940 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 96, 101 ஆண் , 1, 07, 895 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 2, 03, 996 வாக்களித்துள்ளனா். இது 70.36 சதவீதமாகும்.

தென்காசி தொகுதியில் மொத்தம் 2, 92, 168 வாக்காளா்கள்உள்ளனா். இதில், 1, 03, 993 ஆண் , 1, 07, 221 பெண்வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 3 போ் என மொத்தம் 2, 11, 157 போ் வாக்களித்துள்ளனா். இது 72 . 27 சதவீதமாகும்.

ஆலங்குளம் தொகுதியில் மொத்தம் 2, 60, 429 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 97, 793 ஆண், 1, 03, 774, பெண் வாக்களா்கள், மூன்றாம் பாலினத்தவா் 2 போ் என மொத்தம் 2, 01, 569 போ் வாக்களித்துள்ளனா். இது 77. 40 சதவீதமாகும்.

தென்காசி மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 72.5 8 சதவீத வாக்குகள் பதிவாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com