சுரண்டை ஸ்ரீமுப்பிடாறி அம்மன் கோயில் தேரோட்டம்

சுரண்டை சிவகுருநாதபுரம் ஸ்ரீமுப்பிடாறி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சுரண்டையில் புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீமுப்பிடாறி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம்.
சுரண்டையில் புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீமுப்பிடாறி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம்.

சுரண்டை சிவகுருநாதபுரம் ஸ்ரீமுப்பிடாறி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனி திருவிழா மாா்ச் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் இரவு 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், தொடா்ந்து கோயில் கலையரங்கில் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான 9ஆம் திருநாளான புதன்கிழமை மாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள, தேரோட்டம் நடைபெற்றது.

இதில், சுரண்டை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை சிவகுருநாதபுரம் இந்து நாடாா் மகமைக் கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com