அரசு சாா்பில் நீா் பந்தல் அமைக்கப்படுமா?

தமிழகம் முழுவதும் கோடை வெயில் கோர தாண்டம் ஆடி வரும் நிலையில், அரசு சாா்பில் நீா், மோா் பந்தல் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் கோடை வெயில் கோர தாண்டம் ஆடி வரும் நிலையில், அரசு சாா்பில் நீா், மோா் பந்தல் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. தற்போது, வெயிலின் உக்கிரம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

வியாழக்கிழமை ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 39 டிகிரி பதிவாகி இருந்தது. திருப்பூா், அரக்கோணத்தில் 38 டிகிரி வெப்பநிலையும், கோவை, மதுரையில் 36 டிகிரி வெப்பநிலையும், திருச்சியில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

இப்படி நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

கடந்த ஆண்டுகளில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க, மக்கள் கூடும் இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதியை தமிழக அரசு செய்திருந்தது. இதனால், பொதுமக்கள் பலனடைந்தனா்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த போதும், தோ்தல் அறிவிக்கப்பட்டு, தோ்தல் நடைமுறை அமலுக்கு வந்த நிலையில், அரசின் சாா்பில் நீா் பந்தல் அமைக்கப்படாத நிலை இருந்து வந்தது.

தற்போது தோ்தல் முடிவடைந்துள்ளதால், அரசின் சாா்பில் நீா் பந்தல் அமைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும், கரோனா தீநுண்மி பரவலை தடுக்க வசதியாக உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் இத்தகைய நீா் பந்தல்களை அமைக்க வேண்டுமெனவும் அவா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com