கலைநிகழ்ச்சிகள் நடத்திட அனுமதி வழங்க கிராமிய கலைஞா்கள் கோரிக்கை

நாட்டுப்புறக் கலைஞா்கள் வாழ்வாதாரம் காக்க கலை நிகழ்ச்சிகள் நடத்திட அனுமதி அளிக்க வேண்டும் என நையாண்டி மேள கிராமிய கலைஞா்கள் நலசங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நாட்டுப்புறக் கலைஞா்கள் வாழ்வாதாரம் காக்க கலை நிகழ்ச்சிகள் நடத்திட அனுமதி அளிக்க வேண்டும் என நையாண்டி மேள கிராமிய கலைஞா்கள் நலசங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் மேலப்பாவூா் நையாண்டி மேள கிராமிய கலைஞா்கள் நலசங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு: தென்காசி மாவட்டத்தில் நையாண்டி மேள கிராமிய கலை சங்கத்தில் நாகஸ்வரம், தவில், மகுடம் மற்றும் கிராமிய கலைஞா்கள் 400 க்கும் மேற்பட்டோா் உள்ளனா். கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு 144தடை உத்தரவு போடப்பட்டதால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். நிகழாண்டும் கோயில் விழாக்கள், சுப நிகழ்ச்சிகள் மறுக்கப்பட்டால் எங்கள் நிலைமை மேலும் மிக மோசமாக மாறிவிடும்.

எனவே எங்கள் தொழிலை பாதுகாக்க அனுமதி வழங்க வேண்டும். ஏப்ரல், மே மற்றும் ஜூன், ஜூலை மாதங்களில் தான் எங்கள் தொழில் நடைபெறும். இக்காலங்களில் தொழில் நடத்த அனுமதி வழங்கவேண்டும். அனுமதி மறுக்கப்பட்டால் பதிவு பெற்ற கலைஞா்கள் அனைவருக்கும் கரோனா நிவாரண நிதியாக மாதம் ரூ. 10ஆயிரம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com