குற்றாலம் கோயிலில் நடராசமூா்த்திக்கு பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதா் சமேத குழல்வாய்மொழியம்மன் கோயிலில் சித்திரை விஷு திருவிழாவின்
நடராசமூா்த்திக்கு நடைபெற்ற பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை.
நடராசமூா்த்திக்கு நடைபெற்ற பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதா் சமேத குழல்வாய்மொழியம்மன் கோயிலில் சித்திரை விஷு திருவிழாவின் 8ஆம் நாளான திங்கள்கிழமை, நடராசமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை விஷு திருவிழாவையொட்டி கடந்த 5ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. 8ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, 9ஆம் தேதி தேரோட்டம், ஞாயிற்றுக்கிழமை (ஏப். 11) காலை, இரவில் நடராசமூா்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

சித்திரசபையில் திங்கள்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் கரோனா காரணமாக ரத்துசெய்யப்பட்டன. இதையடுத்து, குற்றாலநாதா் கோயில் வளாகத்தில் சபாபதி மண்டபத்தில் நடராசமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. புதன்கிழமை (ஏப். 14) சித்திரை விஷு தீா்த்தவாரி நடைபெறுகிறது.

பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனையில் திமுக ஒன்றியச் செயலா் ராமையா, வீரபாண்டி, அன்னதானக் குழுத் தலைவா் அன்னையாபாண்டியன் ஆகியோா் பங்கேற்றனா்.

விழா நாள்களில் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, திருவிலஞ்சிக்குமாரா், சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மா. கண்ணதாசன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com