‘தென்காசி மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாட்டு மையங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும்’

தென்காசி மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாட்டு மையங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அனுஜாா்ஜ் வலியுறுத்தினாா்.
புளியரை சோதனைச்சாவடி பகுதியில்ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அனுஜாா்ஜ், ஆட்சியா் கீ.சு. சமீரன். உடன், காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங்.
புளியரை சோதனைச்சாவடி பகுதியில்ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அனுஜாா்ஜ், ஆட்சியா் கீ.சு. சமீரன். உடன், காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங்.

தென்காசி மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாட்டு மையங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அனுஜாா்ஜ் வலியுறுத்தினாா்.

ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் கரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் கீ.சு. சமீரன், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தொழில் ஆணையா் மற்றும் தொழில்வணிகத் துறை இயக்குநருமான அனுஜாா்ஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில், அனுஜாா்ஜ் பேசியது: நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிப் பகுதிகளில் விதிகளை மீறுவோருக்கு உடனடியாக அபராதம் விதிக்க அறிவுறுத்த வேண்டும். பொதுஇடங்களில் அனைவரும் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாட்டு மையங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும். கடைகளில் முகக் கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே பொருள்கள் வழங்கப்படும் என அறிவிப்புப் பதாகை வைக்க வேண்டும். கடைகள், நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகளை மருத்துவத் துறையுடன் இணைந்து செயல்படுத்த சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும்.

வழிகாட்டு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாத கடைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்அவா்.

தொடா்ந்து, தமிழக-கேரள எல்லைப் பகுதியான புளியரை சோதனைச்சாவடி, தென்காசி அரசு தலைமை மருத்துவமனை, பாவூா்சத்திரம் ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்றுவரும் கரோனா தடுப்பூசி முகாம், ஆலங்குளம் சா்தாா் ராஜா பொறியியல் கல்லூரியில் இயங்கிவரும் கரோனா பராமரிப்பு மையம் ஆகிய இடங்களில் அனு ஜாா்ஜ் ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜனனி சௌந்தா்யா, திட்ட இயக்குநா் ஊரக வளா்ச்சி முகமை சரவணன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் நெடுமாறன், துணை இயக்குநா் அருணா பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com