தாமிரவருணி விரைவு ரயிலை தென்காசி வழியாக சென்னைக்கு இயக்கக் கோரிக்கை

தாமிரவருணி விரைவு ரயிலை திருநெல்வேலியிலிருந்து தென்காசி வழியாக இயக்க வேண்டும் என தென்காசி மாவட்ட திமுக சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தாமிரவருணி விரைவு ரயிலை திருநெல்வேலியிலிருந்து தென்காசி வழியாக இயக்க வேண்டும் என தென்காசி மாவட்ட திமுக சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜாண் தாமஸிடம் அளித்த மனு:

திருநெல்வேலி -தென்காசி ரயில் தடத்தில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்த வழித்தட மக்களுக்கு சென்னை செல்வதற்கு நேரிடையான ரயில் வசதி இல்லை.

மதுரை ரயில்வே கோட்டத்தில் சென்னைக்கு ரயில்களே இல்லாத ஒரே வழித்தடம் இதுவாகும். சென்னைக்கு ரயிலில் செல்ல வேண்டுமானால் திருநெல்வேலி அல்லது தென்காசி ரயில்வே நிலையத்துக்கு சென்று சென்னைக்கு செல்ல வேண்டியுள்ளது.

மூத்த குடிமக்கள், கா்ப்பிணிகள், உயா் மருத்துவ சிகிச்சைக்கு சென்னைக்கு செல்பவா்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனா். எனவே, இப்பகுதி மக்களின் 9 ஆண்டு கால கோரிக்கையான தாமிரவருணி விரைவு ரயிலை தென்காசி வழியாக சென்னை செல்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com