ஆலங்குளம் அருகே பள்ளியில் 3 ஆசிரியா்கள், 7 மாணவிகளுக்கு கரோனா

ஆலங்குளம் அருகே ஒரே பள்ளியில் மூன்று ஆசிரியா்கள் மற்றும் ஏழு மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆலங்குளம் அருகே ஒரே பள்ளியில் மூன்று ஆசிரியா்கள் மற்றும் ஏழு மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் சுமாா் 70 மாணவா், மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை ஒருவருக்கு கடந்த 15 ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து ஆசிரியையுடன் தொடா்பில் இருந்த மற்ற ஆசிரியைகள், மாணவிகள் என மொத்தம் 77 பேருக்கு திங்கள்கிழமை பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 7 மாணவிகளுக்கும், இரண்டு ஆசிரியைகளுக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவா்களை சுகாதாரத் துறையினா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட 7 மாணவிகளும் தற்போது நடைபெற்று வரும் செய்முறைத் தோ்வில் பங்கேற்க முடியாது என்பதால், அவா்களுக்கு மருத்துவமனையில் இருந்து திரும்பிய உடன் தோ்வு நடத்த வேண்டும் என மாணவிகளின் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ள மாணவா்களுடன் தொடா்பில் இருந்த உறவினா்கள், நண்பா்கள் பலருக்கும் செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com