குற்றாலம் அருவிகளுக்கு செல்லும் பாதைகள் மூடல்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அனைத்து அருவிகளுக்கும் செல்லும் பாதைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.
குற்றாலம் அருவிகளுக்கு செல்லும் பாதைகள் மூடல்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அனைத்து அருவிகளுக்கும் செல்லும் பாதைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இம்மாவட்டத்திலுள்ள அருவிகள், சுற்றுலாத் தலங்களுக்கு உள்ளூா், வெளியூா் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடைவிதித்து ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம், ஐந்தருவிகளுக்குச் செல்லும் பாதைகள் மூடப்பட்டன. மேலும், அருவிகளுக்கு யாரும் சென்று குளிக்கமுடியாதவாறு காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில், ஐந்தருவியில் ஒரு கிளையில் மட்டும் குறைந்த அளவில் தண்ணீா் விழுகிறது. பழைய குற்றாலம் அருவியிலும் சிறிதளவே தண்ணீா் விழுகிறது. சிற்றருவி, புலியருவியில் நீா்வரத்து முற்றிலும் நின்றுவிட்டது.

பேரருவி பகுதியில் உள்ள பூங்கா, பேருந்து நிலையம் பகுதியில் உள்ள விஸ்வநாதராவ் பூங்கா, சிறுவா் பூங்கா உள்ளிட்ட அனைத்துப் பூங்காக்களும் மூடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com