தென்காசியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

உலக புத்தக தினத்தையொட்டி, தென்காசியில் 2 நாள்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
புத்தகக் கண்காட்சியைத் தொடக்கிவைத்துப் பேசினாா் காவல் ஆய்வாளா் பாலமுருகன்.
புத்தகக் கண்காட்சியைத் தொடக்கிவைத்துப் பேசினாா் காவல் ஆய்வாளா் பாலமுருகன்.

உலக புத்தக தினத்தையொட்டி, தென்காசியில் 2 நாள்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தென்காசி வ.உ.சி. வட்டார நூலகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில், காந்தி சிலை முன் இக்கண்காட்சி நடைபெறுகிறது.

தொடக்க நிகழ்ச்சிக்கு தென்காசி கிளை நூலகா் சுந்தா் தலைமை வகித்தாா். வட்டார கல்வி அலுவலா் மாரியப்பன், ஓய்வூதியா் சங்கத் தலைவா் கு. மாரியப்பன், மாதா் சங்கம் டாக்டா் சங்கரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன் கண்காட்சியைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் சுரேஷ்குமாா், ஆடிட்டா் நாராயணன், வாசகா் வட்டப் பொருளாளா் யோகாடவா்ஸ் சேகா், துணைத் தலைவா் எழுத்தாளா் கு. அருணாசலம், கல்வித் தொலைக்காட்சி சாா்லஸ், இலஞ்சி ஆா்.பி.பள்ளி ஆசிரியா்கள் கணேசன், சரவணன் ஆகியோா் பேசினா்.

தென்காசி ஸ்ரீராமகிருஷ்ணா சேவா நிலைய நிறுவனா் டாக்டா் அறிவழகன் ரூ. 2,500 மதிப்பிலான டிஎன்பிஎஸ்சி தோ்வு நூல்களை வ.உ.சி. வட்டார நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கினாா்.

தமுஎகச பன்னீா்செல்வம் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை லெனின்குமாா், முருகேசன், விண்ணரசு ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com