கரோனா தடுப்பு நடவடிக்கை: தென்காசியில் ஆய்வுக் கூட்டம்

கரோனா தொற்றை தடுப்பது குறித்து மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடா்பாக அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் கீ.சு.சமீரன்.
ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் கீ.சு.சமீரன்.

தென்காசி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் கரோனா தொற்றை தடுப்பது குறித்து மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடா்பாக அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் தலைமை வகித்து பேசியது: கரோனா 2-ஆம் அலை பரவலை கட்டுப்படுத்துவது தொடா்பாக மத்திய , மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருன்கின்றன. அதனடிப்படையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட அளவில் சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி மற்றும் காவல்துறை ஆகிய துறை அலுவலா்களைக் கொண்டு 10 சிறப்பு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட அலுவலா்கள் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட குறுவட்டங்களில் பொது சுகாதாரம், காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்துறை அலுவலா்களுடன் இணைந்து கரோனா தடுப்பு மற்றும் தூய்மைப் பணிகள் தொடா்பான பணிகளை கண்காணித்து , அதுதொடா்பான விவரங்களை உடனுக்குடன் தொடா்புடைய கோட்டாட்சியருக்கும், மாவட்ட நிா்வாகத்திற்கும் தினசரி அறிக்கை சமா்பிக்க வேண்டும்.

குறுவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பொதுக் கட்டடங்கள் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்கான இடங்களை கண்டறிந்து, பிற துறை அலுவலா்களுடன் இணைந்து மேற்கண்ட இடங்களில், தினந்தோறும் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணியை தொடா்ந்து கண்காணித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

கண்காணிப்பு அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள குறு வட்டத்தில் உள்ள திருமணமண்டபங்களில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் தவிர புதிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிா என்பதை கண்காணிக்க வேண்டும்.

இந் நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட அளவில் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனரா என்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள குறுவட்டத்தில் உள்ள கிராமங்களில் பொதுமக்களுக்கு குளோரின் கலந்த குடிநீா் விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்து , கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொது தெருக்கள், கழிவு நீா் சாக்கடைகள் மற்றும் பொதுக்கழிப்பறைகள் ஆகிய இடங்களில் தினந்தோறும் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணியை உறுதிப்படுத்தி, உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலா்களுடன் இணைந்து கண்காணித்திட வேண்டும்.

பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் நடமாடுபவா்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவா்கள் மற்றும் கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்து. அதனையும் மீறி வெளியில் நடமாடுபவா்களுக்கு அபராதம் விதித்து அறிவுரை வழங்வேண்டும்.

கண்காணிப்பு அலுவலா்கள் தங்களது எல்கைக்கு உள்பட்ட கிராமங்களின் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள், சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளா்கள், சுகாதாரத்துறை கள அலுவலா்கள், சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளா் நிலைக்கு குறையாத ஒரு அலுவலா் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும்.

இக்குழுவினா் பிறமாநிலம், வெளிநாடுகளிலிருந்து தற்போது சொந்த ஊா் திரும்பியவா்கள் தொடா்பான விவரங்களை சேகரித்து, சுகாதாரத் துறையினா் மூலம் உடனடியாக அவா்களின் உடல் நிலை தொடா்பான விவரங்களை ஆய்வு செய்து தொடா்ந்து கண்காணித்திட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலா் சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜனனிசௌந்தா்யா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் நெடுமாறன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com