சுரண்டை பகுதியில் காய்கனி சாகுபடி தொடக்கம்

சுரண்டை பகுதியில் காய்கனி சாகுபடிக்கான பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

சுரண்டை பகுதியில் காய்கனி சாகுபடிக்கான பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

சிற்றாறு மற்றும் அனுமன் நதி பாசன வயல்களில் விவசாயிகள் நெல் சாகுபடியைத் தொடா்ந்து காய்கனிகளைப் பயிரிடுவது வழக்கம். நிகழாண்டு நெல் அறுவடைப் பணிகள் பிப்ரவரி மாதம் முடிந்த நிலையில், தற்போது தங்களின் நிலங்களை உழுது கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி, பல்லாரி உள்ளிட்ட காய்கனி சாகுபடியைத் தொடங்கியுள்ளனா்.

நிகழாண்டு சுரண்டை பெரியகுளம், சுந்தரபாண்டியபுரம் பட்டா்குளம், சாம்பவா்வடகரை பெரியகுளம், இரட்டைகுளம் ஆகிய குளங்களில் போதிய நீா் இருப்பு உள்ளதால், இந்த பகுதியில் உள்ள அனைத்து கிணறுகளிலும் தண்ணீா் மேல்மட்டத்தில் உள்ளது. எனவே, வழக்கத்தைவிட் கூடுதல் பரப்பில் விவசாயிகள் காய்கனி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com